








திருப்பூர் மாவட்ட காவல்துறை’ 11.08.26 ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சிரிஷ்டிசிங் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் 60 பள்ளி கல்லூரியைச் சேர்ந்த 6700 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்களும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி கல்லூரிகளில் ஒரே நேரத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் மொத்தம் 120 பள்ளி, கல்லூரிகளில் மொத்தம் 26,915 மாணவ மாணவியர்கள் காவல்துறையினர் முன்னிலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர், பின்னர் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் & வெளியிட்டார் M. சரவணகுமார் 9789571219