RNI No TNTAM/25/A3928

திருப்பூர் மாவட்ட காவல்துறை


திருப்பூர் மாவட்டம்
நாள்: 14.02.2026
அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பழைய வழக்கு பொருட்கள் அழிக்கும் போது வெடிப்பு சத்தம் கேட்டது சம்பந்தமாக விளக்கம் அளித்தல் தொடர்பாகஇன்று 14.02.2026-ஆம் தேதி மாலை சுமார் 16.15 மணியளவில், அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், அவிநாசி நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின்படி பழைய வழக்கு தொடர்புடைய பொருட்கள் வெளியே கொண்டு வந்து தீ வைத்து அழிக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெடிப்பு போன்ற ஒரு சத்தம் எழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை, சொத்துச் சேதமும் இல்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பழைய மதுபானங்கள் கொட்டி அழிக்கப்பட்ட இடத்தில், அதிக வெப்பத்தினால் சத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…