RNI No TNTAM/25/A3928

திருப்பூரில் புகார் எதிரொலி அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் தாழ்வாக செல்லும் மின் ஒயர் குறித்து புகார் எதிரொலி அதிரடியாக மாற்றம்

உறக்கத்திலிருந்து விழித்த வெங்கமேடு மின்வாரியம்

புகாரின் எதிரோலி பல மாதங்களாக ஆபத்தான நிலையில நிலையிலிருந்த பழுதடைந்த மின்சார கம்பம் அதிரடியாக மாற்றம்

கைகளில் தொடும்படி இருந்த மின்சார கம்பிகள் வானம் நோக்கி சென்றன

புகாரளித்தால் தான் நடவடிக்கை கட்டுகதை எழுதும் வெங்கமேடு மின்வாரியம் இதற்கு என்ன கதையோ?

திருப்பூர் வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட காளம்பாளையம் பகுதியில் முறைகேடாக தாறுமாறாக டி சி டபுள்யூ பணிகளை மேற்கொண்டதால் பழுதடைந்த கம்பங்களில் உயரழுத்த மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் செல்கின்றது தொடர்ச்சியாக புகாரளித்த பிறகும்கூட எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண்டும் காணாமல் இருப்பதால் உயிர் சேதம் ஏற்பட அதிக அளவிலான வாய்ப்புள்ளாதால் போர்க்கால அடிப்படையில் விரைவாக உரிய தீர்வுகண்டு தாழ்வாக செல்கின்ற மின்சார கம்பிகளை சரிசெய்ய வேண்டுமென அவிநாசியில் நடைபெற்ற மாதாந்திர குறைகேட்பு கூட்டத்தில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்திருந்தார்.

அதன் எதிரோலியாக இன்று அவசர அவசரமாக பழுதடைந்து மிக ஆபத்தான நிலையிலுள்ள உயரழுத்த மின்சாரம் புதியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அதே பகுதியிலிருந்த கைகளில் தொடும்டபடி இருந்த மின்சார கம்பிகளை இழுத்து உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

இது தொட‌ர்பாக இப்பகுதியிலுள்ள நுகர்வோர்கள் புகாரளித்த பிறகும்கூட கண்டும் காணாத நிலையிலிருந்த வெங்கமேடு மின்வாரியம் குறைகேட்பு கூட்டத்தில் புகாரளித்த நிலையில் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி அவர்களின் உடனடி உத்தரவு காரணமாக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது நுகர்வோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…