RNI No TNTAM/25/A3928

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்: தகவல் தெரிந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள்?

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்: தகவல் தெரிந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள்நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையம்–கன்னியாகுமரி ரயில் நிலையம் இடையே, காரியமாணிக்கபுரம் அருகே தண்டவாளப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நாகர்கோவில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 12ஆம் தேதி, நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் சுமார் 1.4 முதல் 1.5 கிலோமீட்டர் தொலைவில், காரியமாணிக்கபுரம் அருகே தண்டவாளப் பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற இருப்புப் பாதை காவல்துறையினர், சடலத்தை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.அடையாள விவரங்கள்இறந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர். சுமார் 170 செ.மீ. உயரம் கொண்ட இவர், கருப்பு நிறத்துடன் நீள்வட்ட முகம் மற்றும் நடுத்தர உடல் அமைப்பைக் கொண்டவர்.அவர் அணிந்திருந்ததாகக் கூறப்படும் உடைகளில், மெரூன் நிற அரைக்கை டி-ஷர்ட், கருப்பு நிற லுங்கி மற்றும் வெள்ளை நிற பாடர் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பச்சை நிற டவுசரும் அதில் ஆங்கில எழுத்துகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடையாளம் காண உதவும் வகையில், இடது பக்க மார்பின் கீழ்பகுதியில் ஒரு கருப்பு மச்சமும், இடது இடுப்பின் கீழ்பகுதியில் மற்றொரு கருப்பு மச்சமும் இருப்பதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.இறந்த நபர் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவர் மீனவராக இருக்கக்கூடும் அல்லது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவரைப் பற்றிய தகவல், உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்கள் குறித்த விவரம் தெரிந்தவர்கள் நாகர்கோவில் இருப்புப் பாதை காவல் நிலையத்தை 94981 01999 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…