டிச.30ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல் கூட்டணி குறித்து சேலத் தில் டிசம் பர் 30-ம் தேதி நடை பெ றும் பொதுக் குழு வில் முடிவு செய் யப் படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் திண் டிவனம் அடுத்த தைலாபுரத் தில் பாமக நிறு வனர் ராம தாஸ் தலைமையில் நடைபெற் றது. அப் போது ராம தாஸ் செய்தி யாளர் களிடம் கூறும் போது,”இட ஒதுக்கீடு கேட்டு வன் னியர் சங் கம், பாமக சார்பில் தமிழகம் முழு வதும்மாவட்ட ஆட்சி யர் அலு வல கங்கள் முன்பு டிசம்பர் 12-ம் தேதி போராட்டம் நடை பெற உள்ளது. சாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு தொடர்ந்து ஆதரவு அளிக் கும் ஊடகங் களுக்கு நன்றி. ஊடகங்களை நம்பிதான் நாங்கள் இந்த போராட் டத்தை நடத்துகிறோம். போராட்டத்தை நீங்கள் தான் பெரிதாக காண் பிக்க வேண்டும். சென் னையில் நடை பெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள் கிறேன். கூட்டணி குறித்து சேலம் மாவட்டம் தலைவாசலில் வரும் டிசம்பர் 30-ம் தேதி நடை பெறும் பொதுக் குழுவில் முடிவு செய்யப் படும். கூட்டணி முடிவை முதலில் ஊடகத் திடம் தான் சொல்வோம். பாமக இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் தேர்தலில் போட்டியிடு வார்” என்றார்.இதனிடை யே, பாமக கவுர வத் தலை வர் ஜி.கே.மணி கூறுகையில், “ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பிரிவுக்கு நான் தான் காரணம் என்று வதந்தி பரப்புகின்றனர். நானும், எங்கள் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி எம் எல்ஏ அருளும் ராஜி னாமா செய்ய வேண் டும் என்கின்றனர். நல் லது நடக்கும் என்றால். நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய் யத் தயார்” என்றார். ஆனால், சேலம் எம்எல்ஏ அருள் கூறுகை யில்,”ராஜி னாமா குறித்த ஜி.கே. மணியின் கருத்தில் என க்கு உடன்பாடு இல்லை. வாக்களித்த மக்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்றார்.