*பழனியில் காவல்துறை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கையால் 700 மது பாட்டில்கள் பறிமுதல்* பழனியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்வதாக பழனி டிஎஸ்பி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி, பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்களை பழனி உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் திரு தனஜெயன் தலைமையில் சார்பாய்வாளர்கள் திரு.கிருஷ்ணன், திரு ரவிசந்திரன் மற்றும் காவலர்கள் தட்சிணாமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர் மேலும் அவர்களிடமிருந்து சுமார் 700 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
