RNI No TNTAM/25/A3928

சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட வுள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று (28.03.2026) நடைபெற்றன. திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல்-2026 நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.இந்தப் பணியில் ஈடுபட உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர்கள் 1, 2, 3 என வாக்குசாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற இருக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.இதில் 202-இராஜபாளையம் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1348 அலுவலர்களுக்கும்,203-திருவில்லிபுத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1360 அலுவலர்களுக்கும், 204-சாத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் 1347 அலுவலர்களுக்கும், 205- சிவகாசி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் 1563 அலுவலர்களுக்கும், 206-விருதுநகர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1448 அலுவலர்களுக்கும், 207-அருப்புக்கோட்டை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற தேவாங்கர் கலைக்கல்லூரியில் 980 அலுவலர்களுக்கும், 208- திருச்சுழி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற சேது தொழில் நுட்ப பயிலகத்தில் 1558 அலுவலர்களுக்கும் என மொத்தம் 9604 அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெற்றன.இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், “ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி, நுணுக்கமான தொழில்நுட்பக் குறைபாடுகளையும் கையாள்வதற்கு இந்தப் பயிற்சி மிக அவசியம். வாக்குப்பதிவு நாளன்று அலுவலர்கள் எவ்விதப் பதற்றமுமின்றிச் செயல்பட இப்போதே முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…