

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தொடரும் இருசக்கர வாகன திருட்டால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.
இளைஞர் ஒருவர் வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு.
வாணியம்பாடி, ஏப்ரல்.30- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துமனையில் 1000 க்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனம் தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி செல்வதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதால் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நடையில் கடந்த 17ஆம் தேதி ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சாம்ராஜ் என்பவர் தனது (யூனிகான்) இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு சிகிச்சையில் உள்ள உறவினரை பார்த்து விட்டு வந்த சில மணி நேரத்திற்குள் இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கறிஞர் சாம்ராஜ்
ஆம்பூர் நகர காவல் நிலையத்தில்
அளித்த அளித்தார். புகாரின் பேரில் நகர போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.