அமைச்சர் திரு. N. ஆனந்த் பிறந்தநாள்: திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்களின் வழிகாட்டுதலில் மகாத்மா கருணை இல்லத்தில் அன்னதானம்!திருப்பூர்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் மிகச் சிறப்பாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடப்பட்டது.திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் இருப்பவர். அந்த வகையில், அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்குக் காலை உணவு வழங்கும் உன்னதத் திட்டத்தை, மாவட்டச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்களின் நேரடி வழிகாட்டுதலிலும், முன்னிலையிலும் சிறப்பாகச் செயல்படுத்தினார்.இந்நிகழ்விற்குப் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. ராம்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மாவட்டச் செயலாளரின் ஆலோசனைகளைத் தொடர்ந்து, திருப்பூர் மேற்கு மாவட்ட விவசாய அணி, தெற்கு ஒன்றிய இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மகாத்மா கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களுக்குத் தங்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை உற்சாகத்துடன் தெரிவித்தனர்.கட்சித் தலைமை மற்றும் அமைச்சர் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் திரு. GK. சங்கர் அவர்களின் இத்தகைய சமூக நலன் சார்ந்த செயல்பாடுகள், திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.